பிரபல பிரித்தானிய WWE மல்யுத்த வீரர் 40 வயதில் அதிர்ச்சி மரணம்
WWE star PAC dies at 40: பிரித்தானியாவைச் சேர்ந்த WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சாட்டர்லி 40 வயதில் காலமானார்.
WWE மல்யுத்த விளையாட்டில் பிரபலமான பிரித்தானிய வீரர் பெஞ்சமின் சாட்டர்லி 40 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெஞ்சமின் சாட்டர்லி
பிரித்தானியாவின் நியூ கேஸில் பகுதியில் பிறந்தவர் பெஞ்சமின் சாட்டர்லி. இவர் நெவில் என்று WWE மல்யுத்த விளையாட்டில் அறியப்பட்டு PAC எனும் தனது ரிங் பெயரால் பிரபலமான வீரராக வலம் வந்தார்.

சிகாகோவில் நடைபெற்ற ஆல் எலைட் மல்யுத்த அமைப்பின் 'ஆல் அவுட்' நிகழ்வில் போட்டியிட்ட பெஞ்சமின் சாட்டர்லி, ஒருநாள் கழித்து 27ஆம் திகதி அன்று உயிரிழந்ததாக அந்த அமைப்பு அறிவித்தது.
ஆனால், AEW அவரது மரணத்திற்கான காரணத்தையோ அல்லது அது தொடர்பான மருத்துவ விவரங்களையோ வெளியிடவில்லை.
ரசிகர்கள் அதிர்ச்சி
40 வயதே ஆன பெஞ்சமின் சாட்டர்லியின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
2004-யில் தனது தொழில்முறை மல்யுத்த வாழ்க்கையைத் தொடங்கிய பெஞ்சமின் சாட்டர்லி, தனது விறுவிறுப்பான சாகச பாணி மற்றும் உடல் ரீதியாக சவாலான செயல்பாடுகளுக்காக அறியப்பட்டார்.
2019-யில் AEW-யில் இணைந்த அவர் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில், பெஞ்சமின் சாட்டர்லியின் மரணம், தொழில்முறை மல்யுத்தத்தின் உடல் ரீதியான சவால்கள் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
