இனி post மட்டுமல்ல., X தளத்தில் அற்புதமான புதிய அம்சம் அறிமுகம்
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் உலகம் முழுவதும் எந்தளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை சொல்லவே தேவையில்லை.
பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவரான எலோன் மஸ்க் (Elon Musk) வாங்கியது தெரிந்ததே.
இந்த ஒற்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்
எலோன் மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் 'X' என மறுபெயரிடப்பட்டது. அதன் பிறகு பல புதிய வசதிகளை கொண்டு வந்து பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வரிசையில், X நிறுவனம் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இனி X தளத்தில் postகள் மட்டுமின்றி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
X செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியை அணுக முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது.
ஆனால் தற்போது Xல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சம் மற்ற பயனர்களுக்கு வழங்கப்படுமா? அல்லது நிறுவனம் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
X introduces audio and video calls for Android users, X premium user, Twitter Premium, Video Calls on X platform, Elon Musk