சீனாவில் ஆட்சி மாற்றமா? மக்கள் பார்வையில் இருந்து மாயமான ஜின்பிங்
சீன அதிபர் ஜின்பிங், இரு வாரங்களாக மக்கள் மத்தியில் இருந்து மாயமானதால் ஆட்சி மாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாயமான ஜின்பிங்
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் சீ ஜின்பிங்(Xi Jinping), சீன அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், 2 வாரங்களாக சீன அதிபர் ஜின்பிங், பொதுமக்கள் பார்வையில் இருந்து மாயமானது, சீனாவில் அதிகார மாற்றம் ஏற்பட உள்ளதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
அரசு நடத்தும் செய்தித்தாள்களில் அவரின் அறிக்கைகளோ, புகைப்படங்களோ இடம்பெறவில்லை.
சீன அரசியல் வரலாற்றில், முறையாக பதவியில் இருந்து நீக்கப்படும் முன்னர், அவர்களை பொது நிகழ்வுகளில் இருந்து ஓரம்கட்டுவது நடந்து வருகிறது.
முன்னதாக, முன்னாள் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்தனர்.
ஜூன் 6, 2025 அன்று 50க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் சீன அரசு கவுன்சிலின் பல அதிகாரிகளும் பதவியேற்றனர். இந்த விழாவில், அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளாதது ஒரு அசாதாரண நிகழ்வு பார்க்கப்பட்டது.
மேலும், ஜின்பிங் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தவிர்த்துள்ளார்.
அடுத்த அதிபர் யார்?
சமீபத்தில், அவருக்கு நெருக்கமான 3 ராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஊழல் காரணமாக நீக்கம் என கூறப்பட்டாலும், ஜின்பிங்கின் அதிகாரம் ராணுவ மட்டத்தில் பலவீனப்படுவதாகவே இது பார்க்கப்படுகிறது.
சீனாவில் அதிபர் பதவி பெரும்பாலும் குறியீட்டு ரீதியாக இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மத்திய இராணுவ ஆணையத்தின் (CMC) தலைவர் பதவிகளில் இருந்து, ஜின்பிங் உண்மையான அதிகாரத்தைப் பெறுகிறார்.
மத்திய இராணுவ ஆணையத்தின் (CMC) முதல் துணைத் தலைவரான ஜெனரல் ஜாங் யூசியா தற்போது சீனாவில் அதிகாரத்தை வகிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 உறுப்பினர்களைக் கொண்ட சக்திவாய்ந்த பொலிட்பீரோவின் ஒரு பகுதியாக இருக்கும் ஜாங், முன்னாள் சீன ஜனாதிபதி ஹு ஜிண்டாவோவுக்கு விசுவாசமான மூத்த CCP உறுப்பினர்களால் ஆதரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்ப வல்லுநரான வாங் யாங், 2022 ஆம் ஆண்டில் சீனாவின் உயர் பதவிக்கான போட்டியாளராகக் கருதப்பட்டார். வாங் யாங், ஜின்பிங்கிற்கு வாரிசாக வளர்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், சீனாவில் அரசியல் அமைப்பிற்குள் கொந்தளிப்பு நிலவும் போது, 2012 மற்றும் 2020 காலகட்டத்தில், இந்திய எல்லையில் மோதலை முன்னெடுப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |