ஜின்பிங் இந்திய ஜனாதிபதிக்கு எழுதிய ரகசிய கடிதம் - சீனாவுடனான உறவுகள் உயிர்பெறும் பாதையில்...
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு ரகசியமாக கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கடிதம், சீனாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அமெரிக்க ஒப்பந்தங்களைப் பற்றிய கவலை தெரிவித்து, இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், சீனாவின் முயற்சிகளை வழிநடத்த சீன அதிகாரி ஒருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த தகவல் பிரதமர் மோடிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் மாதத்தில் இந்திய அரசு சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த தீவிர முயற்சி எடுத்தது.
அதற்கிடையில் அமெரிக்காவுடன் இந்தியாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் சிக்கலாக மாறியிருந்தன.
ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தாமே சமாதானம் செய்ததாக கூறியதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
2020-ல் நடந்த கல்வான் மோதலுக்குப் பிறகு சீனா-இந்தியா உறவுகள் பாதிக்கப்பட்டன.
கடந்த வாரம், எல்லை பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் ஒத்துழைக்க ஒப்பந்தமாயின.
பிரதமர் மோடியும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு (ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1) சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Xi Jinping secret letter, India China relations 2025, Modi China visit, Dragon Elephant Tango, Galwan Valley clash, India China border talks