யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்..!ஹாமஸ் அடுத்த தலைவர் யார்? முக்கிய தகவல்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஹமாஸ் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்
நேற்று தெற்கு காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவரது இறப்பை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை சாத்தியக் கூறுகள் மேற்கொள்ளப்பட்டது, அதில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் ஒருவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சின்வாரின் நடமாட்டம் முடக்கப்பட்டதோடு அவர் தற்போது வெளியேற்றவும் பட்டுள்ளார் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அடுத்த தலைவர் யார்?
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த முக்கிய கேள்வி தலைதூக்கியுள்ளது.
காசாவில் உள்ள பெரும்பாலான ஹமாஸ் தலைவர்கள் ஏற்கனவே இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், யாஹ்யா சின்வாரின் வெளிப்படை வாரிசான அவரது சகோதரர் முகமது சின்வார்(Mohammed Sinwar) தற்போதைய நிலவரப்படி உயிருடன் இருந்தால் அடுத்த தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் டி20 உலக கோப்பை போட்டி: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!
ஆனால் முகமது சின்வாருக்கு அவரது சகோதரர் மற்றும் ஹமாஸின் தலைவரான யாஹ்வா சின்வாரின் அதிகாரமோ அல்லது பின்பற்றலோ இல்லாததால், அவரோ, மற்ற தலைவர்களோ ஹமாஸ் அமைப்பை ஒன்றாக வைத்திருக்க முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |