சதம் விளாசி சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்! முதல் இந்தியர் இவர்தான்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7வது சதத்தை பதிவு செய்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை துவங்கியது. கே.எல்.ராகுல் 38 (54) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அபாரமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 7வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
புதிய சாதனை
இதன்மூலம் 24 வயதிற்கு முன்பே 7 டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார். தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் கிரேம் ஸ்மித்தை (Graeme Smith) அவர் முந்தியுள்ளார்.
மேலும், டெஸ்டில் 23 வயதில் அதிகமுறை 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 4 முறை இதனை செய்த நிலையில், ஜெய்ஸ்வால் 5வது முறையாக 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து முறியடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 8 முறை 150 ஓட்டங்களுக்கு மேல் விளாசி முதலிடத்தில் உள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |