புடினுக்கு எதிராக போட்டியிட தடை; யார் இந்த Yekaterina Duntsova?
புடினுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை எதிர்த்து முன்னாள் தொலைக்காட்சி பத்திரிகையாளர் எகடெரினா டான்ட்சோவா (Yekaterina Duntsova) போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வேட்பாளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் 'குறைபாடுகள்' இருப்பதாகக் கூறி டான்சோவா தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
வேட்பாளராக பதிவு செய்ய எகடெரினா டான்ட்சோவா மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். Ekaterina Dantsova சமர்ப்பித்த 'ஆவணப் பிழைகளை' அந்நாட்டின் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
யார் இந்த எகடெரினா டான்சோவா?
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வரவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும் திட்டமிட்டவர் Ekaterina Dantsovaர்.
40 வயதான அவர் மூன்று குழந்தைகளுக்கு துணை இல்லாத தாய் (Single Mother), அவருக்கு ரஷ்யாவின் கூட்டாட்சி அரசியலில் எந்த அனுபவமும் இல்லை.
யெகாடெரினா டான்சோவாவின் வேட்புமனுவை தொடர அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒரு கூட்டத்தில் ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.
எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பதை விளக்கிய யெகாடெரினா டான்சோவா கூறியதாவது: நான் நம் நாட்டை நேசிக்கிறேன். ரஷ்யா ஒரு வளமான, ஜனநாயக மற்றும் அமைதியான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் தற்போது நமது நாடு முற்றிலும் மாறுபட்ட திசையில் சென்று கொண்டிருக்கிறது.
பலர் இப்போதைக்கு காத்திருக்க விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதற்காக நாம் உழைக்க வேண்டும். அதற்காக இந்த 'தேர்தலில்' வெற்றி பெற முயற்சிப்போம்" என்று டான்சோவா கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |