ரம்ஜான் இலவசங்களை பெற அலைமோதிய கூட்டம்: நெரிசலில் சிக்கி 78 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
ஏமன் நாட்டில் ரம்ஜானை முன்னிட்டு இலவசங்களை பெற சென்ற மக்கள் கூட்டத்தில் 78 பேர், நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரம்ஜான் உதவித் தொகை
ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உதவி தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் உதவி தொகை வழங்கப்படும் இடத்தில் குவிந்துள்ளனர். எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
@almishrah
அப்போது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி சுட்டதாகவும், அதனால் மின்கம்பி துண்டிக்கப்பட்டு கீழே விழுந்ததும் மக்கள் மின்சாரம் என பயந்து அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
பரிதாபமாக உயிரிழப்பு
கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் சிதறி அடித்துக் கொண்டு அவர்கள் ஓடும் போது, கீழே விழுந்ததால் நெரிசலில் சிக்கி 78 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
@skynews
மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பெற்று வரும் இவர்களால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
@skynews
உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் $2,000 டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு $400 டொலர் வழங்கப்படும் என்றும் ஹவுத்திகள் தெரிவித்துள்ளனர்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்
2014ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சனா அரசாங்கத்தை கவிழ்த்ததிலிருந்து, ஈரானிய ஆதரவு ஹவுத்திகள் சனாவைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
@ap
சவூதி அரேபியா 2015 இல் தலையிட முயன்றது, ஆனால் மோதல் பின்னர் ஈரானுக்கு எதிரான ஒரு பினாமி போராக மாறியது.
இதன் விளைவாக 150,000க்கும் அதிகமான மக்கள் இறந்தனர். இது உலகின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றாகும்.