வயிற்றில் கொழுப்பு படியாமல் எளிய முறையில் தடுக்க வேண்டுமா? இந்த ஆசனத்தை செய்து பாருங்க
Yoga
Prevent
Exercise Tips
Stomach Fat
By Balakumar
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது பரம்பரை பிரச்சினையாகவும் இருக்கலாம்.
சோடா, காபி, மைதா, பேக்கரி உணவு வகைகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் தொப்பை ஏற்படும்.
இதனை குறைக்க பாடாதப்பாடுபட வேண்டும். அந்தவகையில் வயிற்றில் கொழுப்பு படியாமல் தடுக்கும் ஒரு ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- முதலில் மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் மடித்து புட்டத்துக்கு அருகில் வைக்கவும். கால் மூட்டுகள் வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும்.
- வலது கணுக்காலை வலது கையாலும், இடது கணுக்காலை இடது கையாலும் பிடித்துக் கொண்டு, இரண்டு தோள்களுக்கு இடையே எவ்வளவு தூரம் இருக்கிறதோ அதே அளவு தூரம் கால் பாதங்களுக்கு இடையேயும் இருக்குமாறு வைக்க வேண்டும்.
- இதே நிலையில் இருந்து கொண்டு மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்துக் கொண்டு இடுப்பு மற்றும் முதுகை தரையில் இருந்து மேலே தூக்கவும். ஆனால் பாதங்கள், கைகள், கழுத்து, தலையின் பின்பகுதி ஆகியவை தரையிலேயே பதிந்திருக்க வேண்டும்.
- இதே நிலையில் சாதாரணமான சுவாசத்தில் 1 நிமிடம் வரை இருக்கவும்.பின்பு மூச்சை வென்விட்டுக் கொண்டே இடுப்பு மற்றும் முதுகை தரையில் இறக்கவும்.
- கைகளின் பிடியைத் தளர்த்திக் கொண்டு இரண்டு கால்களையும் நீட்டவும். இவற்றை மூன்று முறை செய்யவும்.
பயன்கள்
- இவ்வாசனம் உணவு செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.
- மலச்சிக்கலை நீக்குகிறது. நரம்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.
- கழுத்துப் பகுதியின் எலும்பை உறுதி செய்து கழுத்தைப் பலப்படுத்துகிறது.
- முகத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகப் பொலிவு பெறச் செய்கிறது.
- வயிற்றில் கொழுப்பு படியாமல் இவ்வாசனம் தடுக்கிறது.
- இடுப்புப் பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது.
-
கல்லீரல்,மண்ணீரல், கணையம், சிறுநீரகம் இவற்றை நல்ல நிலையில் இயங்கச் செய்கிறது. காலின் தசையை வலுவாக்கப் பயன்படுகிறது. இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஊட்டத்தை சீராக்க பயன்படுகிறது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US