தென்கொரியாவில் அரசியல் பரபரப்பு: ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு எதிராக வாக்கெடுப்பு
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு எதிரான முக்கியமான தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வர உள்ளது.
அவசர நிலை பிரகடனம்
தென்கொரியாவில் கடந்த வாரம் ஜனாதிபதி யூன் சுக் இயோல்(Yoon Suk Yeol) ராணுவ ஆட்சி அறிவித்திருந்தார்.
இது நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் சில மணி நேரங்களிலேயே அவசர நிலை உத்தரவை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார்.
AFP
இந்நிலையில், தென்கொரியாவின் அரசியல் களம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்படுகிறது.
ஜனாதிபதிக்கு எதிராக தேச துரோக குற்றச்சாட்டு
இதையடுத்து ஜனாதிபதி மீதான தேச துரோக குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு நிரந்தர சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தென்கொரியா சட்டமன்றத்தில் 300 இடங்கள் உள்ளன. இதில் 192 இடங்கள் எதிர்க்கட்சியிடம் உள்ளதால், ஆளும் கட்சியின் ஆதரவு இன்றி பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிக்கு அதிகாரம் உள்ளது.
இன்று நடைபெற உள்ள வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |