மீண்டும் வீட்டில் இருந்தே 'பென்சன் பணம்' வாங்கலாம்! அதிரடி அறிவிப்பு
கர்நாடகா மாநிலத்தில் ஓய்வூதியக்காரர்கள் இனி வீட்டில் இருந்தே பணம் பெறும் திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது.
புதிய திட்டம் அறிமுகம்
தபால் நிலையங்களில் கணக்கு வைத்துள்ள பல லட்சக்கணக்கான ஓய்வூதியக்காரர்கள் தபால் நிலையம் வந்து ஓய்வூதிய பணத்தை பெற்று வந்தனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டது.
முன்னதாக, ஓய்வூதியக்கார்களின் பணம் மணியார்டர் மூலம் தபால் நிலையம் வந்து சேரும். பின்பு, தபால்காரர் ஓய்வூதியக்கார்களின் வீட்டிற்கு சென்று பணத்தை கொடுத்து, கையெழுத்து வாங்கி வந்தனர்.
பின்னர், இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு தபால்நிலையத்தில் ஓய்வூதியக்காரர்கள் புதிதாக கணக்கு துவங்கி டி.பி.டி என்னும் நேரடி பணபரிமாற்ற சேவை மூலம் பணத்தை பெற்றனர்.
சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் விதவைகள், முதியோர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோர் தபால் நிலையங்களில் வந்து பென்சன் பணம் வாங்கி கொண்டிருந்தனர்.
தற்போது, இதனை ரத்து செய்து வீட்டில் இருந்தே ஓய்வூதிய பணத்தை எடுக்கும் வகையில் 'டி கியூப்' என்னும் மென்மொருள் மூலம் உருவாக்கப்பட்ட ஆப் தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
'டி கியூப்' மூலம் பணம் பெறுவது எப்படி?
'டி கியூப்' எனப்படும் சாஃப்ட்வேரால் ஆன ஆப், தபால்காரர்களில் மொபைல் போனில் இருக்கும். பின்னர், ஓய்வூதியக்கார்களின் வீட்டிற்கு சென்று தபால்கார்கள் பணத்தை வழங்குவார்கள்.
அப்போது, ஓய்வூதியம் பெறுவார்கள் தனது தொகையை குறிப்பிட வேண்டும். பின்பு, ஓய்வூதியக்கார்களின் கணக்கை திறந்து 'டி கியூப்' ஆப் மூலம் பதிவு செய்யப்படும்.
இதனிடையே ஓய்வூதியக்கார்களின் கைரேகை பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படும். இது, ஆதார் அடிப்படையில் பணத்தை பெற உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல், கணக்கு வைத்திருக்கும் ஓய்வூதியக்கார்களுக்கு ரொக்கத்தொகை வழங்கப்பட்டு, மீதமுள்ள பணம் குறித்தும் தகவல் அளிக்கப்படும்.
அதாவது, இதற்கு முன்பு கணக்கு அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்ட நிலையில், இனி ஆதார் அட்டை இணைப்பு அடிப்படையில் வழங்கப்படும்.
இதன் மூலம் கர்நாடகா மாநிலத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் தபால் துறையில் கணக்கு வைத்துள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே பணம் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |