உங்களால் எங்களுடன் தனியாக மோத முடியாது... மீண்டும் பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ள பிரான்ஸ்
மீன்பிடித்தல் உரிமம் தொடர்பில் மீண்டும் பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஜெர்ஸி தீவுப்பகுதியில் மீன் பிடிக்க அனுமதி கோரி பிரான்ஸ் மீனவர்கள் அளித்திருந்த 47 விண்ணப்பங்களில் 12 விண்ணப்பங்களை மட்டுமே பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தால் பிரான்ஸ் கடும் கோபம் அடைந்துள்ளது.
பிரெஞ்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune, பிரித்தானியாவுக்கு வழங்கப்படும் மின்சாரத்தைத் துண்டித்துவிடுவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
நேற்று, தான் இந்த விவகாரம் குறித்து தனது ஐரோப்பிய சகாக்களுடன் பேசியதாகவும், ஐரோப்பிய மட்டத்தில் அல்லது தேசிய அளவில் பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் தூதரக அளவில் சாந்தமாக செயல்படுவோம், அது ஒத்துவரவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர்.+
உதாரணமாக, பிரித்தானியா மின்சாரத்துக்கு எங்களைத்தான் நம்பியிருக்கிறது. அது தனியாக இருந்துகொண்டே ஐரோப்பாவுடன் மோதலாம் என்றால், அது நடக்காது என்று கூறியுள்ளார் அவர்.
இந்த பிரெக்சிட் நிறைவேறிய பின்னரும், அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை!