வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானிய இளைய தலைமுறை: ஆச்சரிய தகவல்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பிரித்தானியாவில் எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடவேண்டும் என்பதற்காக, உயிரைப் பணயம் வைத்துக்கூட ஆபத்தான முறையில் பிரித்தானியாவுக்குப் பயணிக்கிறார்கள்.
இந்நிலையில், பிரித்தானிய இளைஞர்களே வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்த ஒரு செய்தி வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானிய இளைஞர்கள்
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஓராண்டு காலகட்டத்தில், 16 வயது முதல் 34 வயது வரையிலான 110,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது.

அப்படி வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட இளைஞர்கள் சிலரை பிரித்தானிய ஊடகம் ஒன்று பேட்டி கண்டுள்ளது.
துபாயில் நிதித்துறையில் வேலை செய்யும் பிரித்தானிய இளைஞரான பென் (24), பிரித்தானியாவில் வேலை செய்பவர்கள், அதிக பணவீக்கம், விலைவாசி போன்ற விடயங்களால் கடும் அழுத்தத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கிறார்.

Credit : Guardian
ஜேர்மனியில் பெர்லின் நகரில் மூன்று ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கெய்ட்லின் (27), லண்டன் எப்போதுமே பிஸியாகவும் விலைவாசி அதிகமானதாகவும் இருந்ததாக தெரிவிக்கிறார்.
தாய்லாந்தில் ஃப்ரீலான்ஸ் ஊடகவியலாளராக பணியாற்றும் பிரித்தானிய இளம்பெண்ணான மெய்ஸி, தான் தாய்லாந்தில் வாழ்வதால், தன்னால் நிறைய பணம் சேமிக்க முடிவதாக தெரிவிக்கிறார்.

Credit : Guardian
கனடாவின் வான்கூவரில் வெப் டெவலப்பராக வேலை செய்யும் பிரித்தானியரான நாட் வாட்சன் (24), பிரித்தானியாவின் பல நகரங்களில் தான் வாழ்ந்தும், தன் சொந்த வீட்டில் வாழ்வது போன்ற உணர்வு தனக்கு ஏற்படவேயில்லை என்கிறார்.
கடந்த செப்டம்பரின் கனடா வந்த தனக்கு வெகு சீக்கிரமாக வேலை கிடைத்து, தான் செட்டில் ஆகிவிடமுடிந்ததாக தெரிவிக்கிறார்.
இவர்கள் எல்லோருமே, பிரித்தானியாவில் விலைவாசி, வாடகை, அரசியல் போன்ற வெவ்வேறு விடயங்களை சுட்டிக் காட்டி, பிரித்தானியாவைவிட தாங்கள் தற்போது வாழும் நாடு சிறந்ததாக உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |