காபூலில் மாயமான இளம் வயது பிரித்தானிய சிறுமி: கொடூரமாக கொல்லப்பட்ட தந்தை
காபூல் நகரில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பிரித்தானியர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது இளம் வயது மகள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் நகரில் வியாழக்கிழமை ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 170 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிறார் உட்பட மூன்று பிரித்தானியர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
தாலிபான்கள் விடுத்த காலக்கெடு முடிவுக்கு வர சில மணி நேரங்கள் எஞ்சியிருந்த நிலையில், காபூல் நகரில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் அமைப்பானது குறித்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியர்கள் மூவரும் தனித்தனி குடும்பத்தினர் எனவும், காயங்களுடன் மேலும் இரு பிரித்தானியர்கள் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட பிரித்தானியர்களில் ஒருவர் Muhammad Niazi எனவும், காபூல் விமான நிலையத்தில் சிக்கியுள்ள தமது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டுவர லண்டனில் இருந்து காபூல் நகருக்கு சென்றவர் எனவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர், இவரது மனைவி, மகள் மற்றும் இளம் வயது சிறுமி ஆகியோர் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் உறுதி செய்துள்ள மூன்று பிரித்தானியர்களில் Muhammad Niazi ஒருவரா என்பது தொடர்பில் தெளிவான தகவல் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.