பல கோடி பணத்தை வேண்டாம் என தூக்கி எறிந்த புலம்பெயர்ந்த இளைஞன்! சொன்ன ஒரு காரணம்.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ 16 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய புலம்பெயர்ந்த ஊழியர் தனது பணியை தூக்கி எறிந்த நிலையில் அதற்காக அவர் கூறிய காரணம் பலரை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஒருசேர ஆழ்த்தியுள்ளது.
சீனாவினை சேர்ந்த மைக்கேல் லின் என்ற பொறியாளார் தான் தனது வேலையினை தூக்கி எறிந்துள்ளார். ஆரம்பத்தில் அமேசானில் பணிபுரிந்த மைகேல், கடந்த 2017ம் ஆண்டு தான் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்.
இவருக்கு ஆண்டு ஊதியம் 4.50 லட்சம் டொலராகும். இதன் இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட ரூ 16 கோடிக்கும் மேல். இந்த நிலையில் மே 2021ல் தனது பணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேறிய போது அவருக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் தான் செய்யும் வேலை மிக போர் (சலிப்பு) (bore) அடிப்பதாக அந்த ஊழியர் காரணம் தெரிவித்துள்ளார்.
business insider
மைக்கேல் கூறுகையில், எனக்கு நெட்பிளிக்ஸ் வேலையில் இலவசமாக உணவு, அதிகளவிலான சம்பளம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை என பலவும் கிடைத்தது. எனினும் அந்த வேலை எனக்கு போர் அடித்ததால் வேலையை விட்டு நின்றுவிட்டேன்.
என்னுடைய இந்த முடிவுக்கு எனது பெற்றோர்கள் முதலில் ஆட்சேபித்ததோடு என் முடிவை கேட்டு அதிர்ந்தனர். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை, நான் வெளியேறியது அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கான அவர்களின் கடின உழைப்பை தூக்கி எறிந்தது போல இருந்தது.
ஆரம்ப காலத்தில் இந்த பணியில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எம்பிஏ படிக்கும்போது கேஸ்டடியில் வேலை பார்த்தது போன்று இருந்தது. அதற்கு சம்பளமும் தரப்பட்டது. அனைத்தையும் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனாவுக்குப்பின் சமூகமயமாக்கல், சக ஊழியர்கள், ஊதியம் , வேலை என அனைத்தும் முடிவுக்கு வந்தது. எனக்காக நான் வேலை செய்ய முடிவில்லை.
எனக்கு வேலையில் நீடிக்க பிடிக்காமல் போனது போர் அடிக்கத் தொடங்கியது. அதனால் தான் வேலையை ராஜினாமா செய்தேன்.
தற்போது சொந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இந்த பணியில் முழுமையாக ஈடுபட முடிவு செய்துள்ளேன். எனக்கு தொழிலில் இன்னும் நம்பத்தகுந்த வருமானம் எதுவும் இல்லை என்றாலும், உற்சாகமளிக்கும் வேலையைச் செய்தால் அது நல்லதையே எனக்கு செய்யும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.