சாலையில் பிள்ளைகளுடன் தனியாக சிக்கிய இளம் தாயார்... இரு இளைஞர்களால்: நடுங்க வைத்த கொடூரம்
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் அருகே சாலையில் பிள்ளைகளுடன் தனியாக சிக்கிய இளம் தாயாரை சீரழித்து, கொள்ளையிட்டு தப்பிய இளைஞர்கள் இருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த லாகூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அபித் மால்ஹி மற்றும் ஷப்கத் அலி பக்கா ஆகியோரை கூட்டு பலாத்ராகம், கடத்தல், கொள்ளை மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்காக சனிக்கிழமை மரண தண்டனை விதித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர் அப்போது முன்வைத்த கேள்விகளால் கொந்தளிப்படைந்த மக்கள், வீதியில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
2020 செப்டம்பர் 9ம் திகதி பிரான்சில் வசிக்கும் பாகிஸ்தானியரான குறித்த பெண்மணி தமது இரு பிள்ளைகளுடன் தனியாக லாகூரில் இருந்து காரில் புறப்பட்டுள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டமாக அவரது காரில் எரிபொருள் காலியாக, ஆள் நடமாட்டம் குறைவான அப்பகுதியில் உதவிக்கு ஆளின்றி தவித்துப் போயுள்ளார்.
ஆனால் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து உதவி கோரிய நிலையில், அவர் அளித்த ஆலோசனையின் பேரில் பிரதான சாலை அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அபித் மால்ஹி மற்றும் ஷப்கத் அலி பக்கா ஆகிய இளைஞர்கள் இருவர், குறித்த பெண்மணிக்கு உதவுவதாக கூறிவிட்டு, அவரை தாக்கி, அருகாமையில் உள்ள வயல்வெளிக்கு இழுத்துச் சென்று, பயத்தில் அலறும் பிஞ்சு சிறுவர்கள் முன்னிலையில் சீரழித்துள்ளனர்.
மட்டுமின்றி, அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றையும் கொள்ளையிட்டு தப்பியுள்ளனர். இதனிடையே, குறித்த பெண்மணியின் உறவினர் எரிபொருளடன் உதவிக்கு வரவே, அவரிடம் நடந்த சம்பவங்களை கூறி, பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அடுத்தா நாள் பகல், லாகூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களை சந்தித்து, ஆள் நடமாட்டமற்ற சாலையை அவர் தெரிவு செய்தது ஏன் எனவும், தனியாக பிள்ளைகளுடன் செல்ல துணிந்த அவர் ஏன் தேவைக்கு எரிபொருள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகவே, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.