தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணமகள்! மணமகன் குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்து மணமகளே திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அவ்வை நகரைச் சேர்ந்தவர் தினகரன், இவருக்கும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை படுஜோராக செய்தததுடன் உறவினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்றைய தினம் கோவிலில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில், மணமகளுக்கு தாலிகட்ட செல்லும் நேரம் அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் மாப்பிள்ளை முதல் உறவினர்கள் வரை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மணமகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நலப் பிரச்சனை எதுவுமில்லை என கூறியுள்ளார்.
பின்னர் விசாரித்த பார்த்த போதுதான், தான் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இந்த திருமணம் பிடிக்காததால் மயக்கம்போட்டு விழுந்ததாகவும் மணமகள் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் தினகரன், திருமணத்திற்காகச் செலவு செய்யப்பட்ட பணத்தைப் பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலிஸார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் திருமணத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தைக் கொடுப்பதாகப் பெண் வீட்டார் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.