சாலையில் பிச்சையெடுத்தபடி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! நடந்தது என்ன? வெளியான புகைப்படங்கள்
தாய்லாந்தில் சாலையில் பிச்சை எடுத்த இளம்பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த போது அங்கு வந்த பொலிசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற சூழலில் அவர்களிடம் தான் மோசடி பெண் இல்லை என நிரூபிக்கும் நிலைக்கு அப்பெண் தள்ளப்பட்டுள்ளார்.
பட்டாயாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் அமைந்துள்ள கடைக்கு முன்னர் அமர்ந்தபடி இளம்பெண்ணொருவர் சில தினங்களாக கை குழந்தையுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
அவர் குறித்து சந்தேகமடைந்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். ஏனெனில் அந்த பகுதியில் மனிதக் கடத்தலில் தொடர்புடைய கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கடத்தி சில பெண்களிடம் கொடுத்து பிச்சை எடுக்க செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தகவலையடுத்து அதிகாரிகள் அங்கு வந்த போது பிச்சைக்காரி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, இது என்னுடைய குழந்தை தான்,என் கணவருக்கு வேலை பறிபோய்விட்டது, சாப்பிடுவதற்கே வழி இல்லாததால் தான் பிச்சை எடுக்கிறேன் என கூறினார்.
ஆனால் குழந்தை தன்னுடையது தான் என்பதை நிரூபிக்க அவரால் எந்தவொரு ஆதாரத்தையும் கொடுக்கமுடியவில்லை.
இதையடுத்து அவரை அவசர அவசரமாக விசாரணைக்கு அழைத்து சென்ற பொலிசார் அப்பெண்ணின் அடையாளம் மற்றும் குடியேற்ற நிலையையையும் ஆராயவுள்ளனர்.