விஷம் கலந்து குடிப்பதை வீடியோ எடுத்து அனுப்பிய 22 வயது இளைஞர்!
தமிழகத்தில் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விலையுயர்ந்த இருசக்கர வாகனம்
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் நந்தகுமார் (22) அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வேண்டும் என தந்தையிடம் நந்தகுமார் கேட்டுள்ளார். கூலித் தொழிலாளியான தன்னால் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி தர முடியாது என கோவிந்தராஜ் மறுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை முடிவு
இதனால் விரக்தியடைந்த நந்தகுமார், எலிபெஸ்ட் வாங்கி அதனை மில்க் ஷேக்கில் கலந்து குடித்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் நந்தகுமார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் கோவிந்தராஜ் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.