அம்மா உன்ன மிஸ் பண்றேன்! இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்
தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
இறப்பதற்கு முன் விஜய் எழுதிய கடிதத்தில் அம்மா நான் உன்ன மிஸ் பண்றேன் என எழுதப்பட்டிருந்தது
சென்னையில் இளைஞர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் வீட்டின் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் விஜய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தாய் கலா தனது மகன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.
அதன் பின்னர் அக்கப்பக்கத்தினர் உதவியுடன் விஜய்யை அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் விஜய்யின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டில் சோதனையிட்ட பொலிசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில் அம்மா நான் உன்ன மிஸ் பண்றேன் என விஜய் எழுதியிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.