கமெராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்? மோடியை விமர்சித்த ராகுல் காந்தி
கமெராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி கேள்வி
இந்திய மாநிலமான ராஜஸ்தானில், முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செய்து ஆதரித்த பாகிஸ்தான் அதற்கு விலை கொடுக்க வேண்டுமென்று ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியிருக்கிறது. என் உடம்பில் இரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் ஓடுகிறது" என்றார்.
இதற்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "மோடிஜி, வெறுமனே பேசிக்கொண்டே இருப்பதை நிறுத்துங்கள்.
பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள்? டிரம்பிற்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?
கமெராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது? நீங்கள் இந்தியாவின் கௌரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |