திருடன் என நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற கடை உரிமையாளர்கள்! அதிர வைத்த சம்பவம்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 24 வயது இளைஞர் கடை உரிமையாளர் திருடன் என நினைத்து தாக்கியதில் உயிரிழந்தார்.
இரவில் நடமாடிய இளைஞர்
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் அனில் குமார் (24) என்ற இளைஞர், மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடைக்கு அருகில் இரவு வேளையில் நடமாடியுள்ளார்.
அந்த கடைசியில் ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடந்திருந்தது. இதனால் அனில் குமாரை கவனித்த அப்பகுதி கடை உரிமையாளர்கள் சிலர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
iStock
இதில் பலத்த காயமடைந்த அனில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Tila Mor அருகே அனில் குமார் உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் கைது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் அனில் குமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மரச்சாமான் உரிமையாளர்களான அக்லக் கான் (26), ஷுபான் கான் (24) மற்றும் நௌஷாத் (20) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
பொலிசாரின் அறிக்கையின்படி கைது செய்யப்பட்டவர்கள் பழைய தளபாடங்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |