குடும்பமாக உயிரிழந்ததாக பரவிய புகைப்படம்..நிலச்சரிவில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பதாக இளைஞர் பேட்டி
வயநாடு நிலச்சரிவிற்கு முன்பே இடம்பெயர்ந்துவிட்டதால் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக சூரல்மலை இளைஞர் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கேரளாவின் வயநாடு பகுதியை சிதைத்துள்ளது.
270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், சூரல்மலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது.
அவர்கள் ஒன்றாக இருந்த புகைப்படம் மண்ணில் புதைந்திருப்பது பலரின் மனதை உலுக்கியது. இதனால் நெட்டிசன்கள் பலர் குறித்த புகைப்படத்தை பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
உயிருடன் இருப்பதாக
இந்த நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் உயிருடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதில் இருப்பவர்கள் தீரஜ் என்ற இளைஞர் மற்றும் அவரின் தங்கையும், மனைவியும் ஆவர்.
அவர்கள் மூவரும் நிலச்சரிவு ஏற்படும் முன்னரே அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் பத்திரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இளைஞர் தீரஜ் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், வயநாடு நிலச்சரிவில் இதுவரை 1000 பேர் வரை காணவில்லை என்றும், மூன்று கிராமங்கள் அப்படியே காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |