தலை நசுங்கிய நிலையில் 19 வயது இளைஞரின் சடலம்: 5 சிறுவர்கள் கைது
தமிழக மாவட்டம் திண்டுக்கல்லில் 19 வயது இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
தலை நசுங்கிய நிலையில்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (19). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கருணாகரபுரி பகுதியில் பிரகாஷின் சடலம் தலை நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரகாஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
5 சிறுவர்கள்
அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்துள்ளது. எனவே, பிரகாஷின் தலையில் கல்லைப்போட்டு மர்மநபர் கொன்றிருக்கலாம் என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏரியா பிரச்சனை காரணமாக கொலை நடந்ததாக தெரிந்தது.
மேலும், இந்த வழக்கில் 5 சிறுவர்கள் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்தனர். எனினும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |