காதலியை முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது கார் மோதி இளைஞர் அதிர்ச்சி மரணம்! திடுக்கிட வைக்கும் வீடியோ
பிரேசில் நாட்டில் இளைஞர் ஒருவர், நடைபாதையில் காதலியை முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது கார் மோதியதில் பலியானார்.
காதலியை முத்தமிட்டுக் கொண்டிருந்த இளைஞர்
பிரேசிலைச் சேர்ந்த ஜோனாதன் ரிபேரோ (31) என்ற இளைஞர், சாவோ பாலோவின் தெற்கு மண்டலத்தில் தனது 26 வயது காதலியுடன் நடந்து சென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் நடைபாதையில் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.
இதில் ரிபேரோ தூக்கி வீசப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு படுகாயமடைந்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி ரிபேரோ பரிதாபமாக உயிரிழந்தார். உயிர்தப்பிய காதலிக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு மற்றும் தலை, கால்களில் காயம் ஏற்பட்டது.
நினைவில்லை எனக் கூறிய சாரதி
இச்சம்பவம் குறித்து விசாரணையை துவங்கிய பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து கேட்டபோது தனக்கு எதுவும் நினைவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது காரில் சோதனை நடத்திய பொலிஸார் போதைப் பொருட்களை கைப்பற்றினர். இந்த நிலையில் குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு தற்காலிக விடுதலை வழங்கப்பட்டுள்ளதாக பிரேசிலிய செய்தி நிறுவனமான G1 தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |