சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற இளைஞர்..காத்திருந்த அதிர்ச்சி
இந்திய மாநிலம் அரியானாவில் இளைஞர் ஒருவர், டேட்டிங் ஆப் மூலம் பழகிய இளம்பெண்ணால் தனது செல்போன் உட்பட 1.78 லட்சம் பணத்தை பறிகொடுத்துள்ளார்.
டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்
அரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் குப்தா. இவர் ஒன்லைனில் செயலி ஒன்றின் மூலம் சாக்ஷி எனும் பெண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இவர்களது சாட்டிங் நட்பு பல நாட்கள் நீடித்துள்ளது. இந்நிலையில் ரோகித்தை காண நேரில் வருவதாக சாக்ஷி கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ரோகித், கடந்த 1ஆம் திகதி இரவு சாக்ஷியை நேரில் சந்தித்துள்ளார்.
இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் மதுபானம் வாங்கிக் கொண்டு ரோகித்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மதுபானத்தில் கலக்க ஐஸ் வேண்டும், போய் எடுத்து வா என சாக்ஷி கூற ரோகித்தும் சமையலறைக்கு சென்று எடுத்து வந்துள்ளார்.
விலையுயர்ந்த பொருட்களுடன் மயமான பெண்
பின்னர் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ரோகித் உடனே மயங்கி விழுந்துள்ளார். காலையில் எழுந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தன்னுடைய தங்க சங்கிலி ஆப்பிள் ஐபோன், ரூ.10,000 மற்றும் கிரெடிட், டெபிட் கார்டுகள் அனைத்து திருடப்பட்டிருந்ததை அறிந்து கலக்கமடைந்தார்.
மேலும், அவரது வங்கிக்கணக்கில் இருந்து 1.78 லட்சம் ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்தார். அதனைத் தொடர்ந்து சாக்ஷி மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Getty images உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |