30 வயது வரை வாழ்ந்ததே போதும்! இளம் தொழிலதிபர் தற்கொலை..சிக்கிய அதிர்ச்சி கடிதம்
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளம் தொழிலதிபர் ஒருவர், இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போதும் என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தொழிலதிபர் தற்கொலை
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் ஹிரா நகரைச் சேர்ந்த 30 வயது தொழிலதிபர், கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு அருகில் கைத்துப்பாக்கி கிடைத்துள்ளது.
அது 2016ஆம் ஆண்டு சுய பாதுகாப்பிற்காக அவர் வாங்கி வைத்துள்ளார் என தெரிய வந்தது. ஆனால், குறித்த இளைஞர் எழுதிய 7 பக்கம் கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Inzmam Khan via Pexels.com
30 வயது
அதாவது, 30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் என அவர் 8, 9 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்ததாக எழுதியிருக்கிறார்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் வெளியே குதித்த பேருந்து ஓட்டுநர் பலி! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
மேலும், தனக்கு வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், 30 வயது வாழ்க்கையே தனக்கு போதும் என்றும் குறித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் இந்த தற்கொலை குறித்து கூறுகையில், 'திருமணம் ஆகாத வாலிபரான அவர் மனநல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்திருக்கக் கூடும். தனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் கிடையாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். எனவே, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.
File
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |