சீமானுக்கு இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தான விடயம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த நிலையில் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
மொத்தம் இருக்கும் 543 மக்களவை தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் 234 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
செல்வப்பெருந்தகை பேசியது
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர்.
கடந்த 2019 -ம் ஆண்டில் நரேந்திர மோடி 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிலையில் இந்த ஆண்டு 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் பாமகவுக்கு சொந்தமானவை. பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2 -வது இடத்தை பிடித்துள்ளது.
சீமான் ஒரு பிரிவினைவாதி. ஏமாந்த இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பது ஆபத்தான விடயம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |