இனி யாரும் இதை பற்றி வீடியோ போடாதீங்க! மீறினால்.. யூடியூப் கடும் எச்சரிக்கை
யூடியூபில் தடுப்பூசிக்கு எதிராக காணொளி வெளியிட்டால் உடனடியாக வீடியோ நீக்கப்படும் என்று யூடியூப் நிறுவனம் மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வேகமாக தொடர்ந்து பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் பல நாடுகள் அதனை எதிர்த்து வருகிறார்கள்.
குறிப்பாக அமெரிக்காவில் இருந்து தடுப்பூசிகளை எதிராக பல குரல்கள் யூடியூப் சேனலில் எழுந்து வருகின்றது. இதை தடுத்து நிறுத்த யூடியூப் நிறுவனம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
யாராவது தடுப்பூசிக்கு எதிராக காணொலியை வெளியிட்டால் அந்த வீடியோ உடனடியாக நீக்கப்படும் என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யூடியூப் பக்கத்தில் தடுப்பூசிக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பியதால் அந்த பக்கத்தை நிர்வாகம் முடக்கியிருக்கிறது.
இதனால் இனி ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.