50,000 மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க 100 கிணறுகள்: யூடியூபரின் பிரமிக்கவைக்கும் உதவி
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க 100 கிணறுகளை அமைத்து பிரபல யூடியூபர் ஜிம்மி டோனல்ட்சன் உதவியுள்ளார்.
யூடியூபர் செய்த பெரும் உதவி
பிரபலமான யூடியூப் பிரபலமான 'MrBeast' எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் ஆப்பிரிக்க மக்களுக்கு மிகப்பெரிய உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
யூடியூபில் 207 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள ஜிம்மி டோனல்ட்சன், டைம்ஸ் இதழின் உலகிலேயே அதிக செல்வாக்கு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
?? YouTuber MrBeast releases a new video claiming to drill 100 African freshwater wells.
— NATO?? VS KREMLIN?? (@eduinfotech101) November 6, 2023
The American says that they will supply enough clean drinking water for around 500,000 people.#MrBeast pic.twitter.com/HYhp3ZNldA
100 போர் கிணறுகள் இந்நிலையில் கென்யா, ஜிம்பாப்வே, போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 100 போர் கிணறுகளை அமைத்து, கிட்டத்தட்ட 50,000 மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்து கொடுத்துள்ளார்.
மேலும் இவர் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து சுமார் 2.5 கோடி ரூபாய் நிதி திரட்டி கென்யாவில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுப்பது, ஆற்றை கடப்பதற்கான பாலம் அமைத்து கொடுப்பது ஆகிய உதவிகளை செய்துள்ளார்.
if you dont have time for the full video just yet, check out the heart warming clip here.... truly inspiring :) we love you @MrBeast
— SavvyMedia (@SBusinessDaily) November 4, 2023
MrBeast's Liquid HOPE | 30-Year Wells Transforming African Villages #mrbeast #WaterForLife #ImpactJourney pic.twitter.com/KTqOu2AD6z
அத்துடன் 1000 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை, 2000 பேருக்கு செயற்கை கால்கள் வழங்குவது ஆகிய உதவிகளை செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |