காதலி மற்றும் அவரது அம்மாவை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய யூடியூபர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நிக் யார்டி (Nick Yardy), சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
3.4 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட இவருடைய யூடியூப் சேனலில், தனது காதலி மற்றும் அவரது அம்மாவை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கியதாக கூறியது, இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக் யார்டி மற்றும் அவரது அசாதாரண உறவு
29 வயதான நிக் யார்டியின் உண்மையான பெயர் நிக்கோலஸ் ஹன்ட்டர் (Nicholas Hunter), 2017-ல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, சமூக வலைத்தளங்களில் தனது பயணத்தை தொடங்கிய இவர், நகைச்சுவை வீடியோக்கள் மற்றும் மாடல்களுடன் இணைந்து பல்வேறு உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறார்.
இவரது காதலி ஜேட் (Jade), 22 வயது, ஒரு பிரபலமான மாடல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வீடியோ படப்பிடிப்பில் சந்தித்த இவர்கள், தீவிர காதலர்களாக மாறினர்.
ஜேட்டின் அம்மா டானி (Dani), 44 வயது, ஒரு வாழ்க்கை பயிற்சியாளர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.
நிக் மற்றும் ஜேட் உடனான உறவு தீவிரமடைந்த பிறகு, டானியும் அவர்களுடன் நெருக்கமாகி, கடந்த இரண்டு வருடங்களாக மூவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்த அசாதாரண உறவு மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
An OnlyFans model named Jade says she and her mom were impregnated by YouTuber Nick Yardy two weeks apart. pic.twitter.com/ClXQI0gG2i
— E! News (@enews) March 1, 2025
யூடியூப்பில் வெளியான அதிர்ச்சி வீடியோ
நிக் யார்டி தனது யூடியூப் சேனலில் "நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்" (We’re Pregnant) என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், ஜேட் மற்றும் டானி ஒரே மாதிரியான கர்ப்பகால ஆடைகளை அணிந்து, நிக்கின் கைகளை பிடித்தபடி தங்கள் வயிற்றை தடவிக் கொண்டு நின்றனர்.
வீடியோவில், "நான் ஜேட் மற்றும் டானியை கர்ப்பமாக்கிவிட்டேன், இருவரும் என் குழந்தைகளுக்கு தாயாக போகிறார்கள்" என்று நிக் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"என் வயதில் இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்று டானியும் கூறினார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது, மேலும் இணையம் முழுவதும் இது குறித்த விவாதங்கள் சூடு பிடித்தன.
உண்மை வெளிப்பாடு
இந்த பரபரப்புக்கு மத்தியில், உண்மை கண்டறியும் குழுக்கள் நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
நிக் யார்டி, டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில், இந்த கர்ப்பம் உண்மை இல்லை, இது ஒரு நாடகம் மட்டுமே. ஜேட் மற்றும் டானி கர்ப்பமாக இல்லை, இது ஒரு பொழுதுபோக்கு முயற்சி என்று கூறினார்.
இருப்பினும், "எங்கள் மூவரின் உறவு உண்மை, நாங்கள் இரண்டு வருடங்களாக ஒன்றாக வாழ்கிறோம். கர்ப்பம் பற்றிய பகுதி மட்டுமே போலியானது, எதிர்காலத்தில் அது உண்மையாகலாம்" என்று அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |