யுவராஜ் சிங்குடன் காதலில் இருந்த பிரபல நடிகை: யார் தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், சிக்சர்களுக்கு பெயர்போனவர்.
இவர், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இவர் 2016ஆம் ஆண்டு ஹேசல் கீச் என்றவர் திருமணம் செய்துகொண்டார். இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு இவரை பற்றி பரவிய காதல் வதந்திகள் குறித்து பார்க்கலாம்.
ஆரம்ப கிரிக்கெட் வாழ்க்கையில் யுவராஜ் சிங்கும் நடிகை கிம் சர்மாவும் 4 ஆண்டுகளுக்கு மேல் காதல் உறவில் இருந்துள்ளனர்.
பின்னர் யுவராஜ் சிங்கின் குடும்பத்தினர் இந்த உறவை அதிகம் விரும்பாததால், இவர்களின் உறவு முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின் யுவராஜ் சிங் தீபிகா படுகோனுடனான உறவு குறித்து அவரே ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார்.
நண்பர்கள் மூலம் நாங்கள் சந்தித்தோம். நாங்கள் ஒருவரையொருவர் விரும்பினோம். பின்னர் அவரும் நகர்ந்தார், நானும் நகர்ந்தேன் என கூறினார்.
இதற்கடுத்து யுவராஜ் சிங் மற்றும் நடிகை நேஹா தூபியா காதல் உறவில் இருப்பதாக வதந்திகள் பரவின.
பின்னர் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறினர். மேலும், யுவராஜ் சிங்கின் திருமணத்தில் நேஹா தூபியா கலந்து கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |