50 ஓவர் உலகக்கோப்பையில் சாஹல் இருப்பார்- புகழ்ந்து தள்ளிய சவுரவ் கங்குலி
நிச்சயமாக 50 ஓவர் உலகக்கோப்பையில் சாஹல் இருப்பார் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.
50 ஓவர் உலகக்கோப்பையில் சாஹல் இருப்பார்
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சுழற் பந்து வீச்சில் அபாரமாக விளையாடி பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார் வீரர் சாஹல்.
ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் இதுவரை 91 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இவருடைய விளையாட்டை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள், மற்ற நாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களும் உற்று நோக்கி வருகின்றனர்.
அந்த அளவிற்கு தன்னுடைய திறமையால் நட்சத்திர வீரராக வலம் வருகிறார் சாஹல். இந்நிலையில், சாஹல் கண்டிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருப்பார் என்று சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெல்ல முக்கிய வீரராக சாஹல் செயல்படுவார். சாஹல் தொடர்ந்து தன்னுடைய சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இவருடைய பந்து வீச்சில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணி திணறும்.
இந்திய அணி சாஹலை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டி20 உலகக்கோப்பையில் செய்த தவற்றை 50 ஓவர் உலகக்கோப்பையில் செய்யக் கூடாது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |