இரகசிய சந்திப்பை அம்பலப்படுத்திய ஜெலென்ஸ்கி: ஜனாதிபதி புடினுக்கு மறைமுக எச்சரிக்கை
ரஷ்ய கோடீஸ்வரரை கீவ்வில் சந்தித்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
பகிரங்கமாக நிராகரித்த புடின்
சில நாட்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு பயணம் செய்ய ஜெலென்ஸ்கி அழைத்ததாக, தன்னை தொழிலதிபர் ஒருவர் அணுகியதாக கூறினார்.
மேலும், ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதில் "எந்தப் பயனும் இல்லை" என்று கூறி புடின் அந்த அழைப்பை பகிரங்கமாக நிராகரித்ததாக தெரிய வந்தது.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய கோடீஸ்வரரை சந்தித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கடந்த மாதம் கீவ்வில் ரோமன் அப்ரமோவிச் என்ற ரஷ்ய கோடீஸ்வரரை சந்தித்துள்ளார்.
ஒருபோதும் விட்டுக்கொடுக்காது
அப்போது 'உக்ரைன் தனது கிழக்கு டான்பாஸ் பகுதியை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது' என்பதை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மறைமுகமாக தெரிவித்ததாகவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் அப்ரமோவிச் தனது மத்தியஸ்த பங்கு முற்றிலும் இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், அந்த சந்திப்பு இரகசியமானது அல்ல என்று தெளிவுப்படுத்திய ஜெலென்ஸ்கி, "நான் அவரிடம் டான்பாஸ் பற்றி சொன்னேன். அதுதான் முக்கிய செய்தியாக இருந்தது. நாங்கள் வெளியேற மாட்டோம், எங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று சொன்னேன். நாங்கள் உங்களுக்கு அப்படி ஒரு வெற்றியைத் தரமாட்டோம். உங்களுக்கு அது கிடைக்காது" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |