ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அம்பலமான ரஷ்யாவின் பொய்
ரஷ்யர்கள் கைப்பற்றியதாக புடின் அறிவித்த ஒரு முன்னணி போர் மண்டல நகரத்தில் சில மணி நேரங்களுக்கு பிறகு ஜெலென்ஸ்கி விஜயம் செய்து புகைப்படம் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொய்யானத் தகவலை
உக்ரைனின் குபியன்ஸ்க் பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய இராணுவ நிலையிலிருந்து சில மைல்கள் தொலைவில் காணப்பட்டார்.
இராணுவத்தின் பாதுகாப்பு உடையுடன் காணப்பட்ட ஜெலென்ஸ்கியின் அந்த புகைப்படம், விளாடிமிர் புடினின் பொய்யானத் தகவலை அம்பலப்படுத்தியுள்ளது.

கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள மிக முக்கிய நகரமான குபியான்ஸ்க்கை தனது படைகள் கைப்பற்றியதாக ரஷ்ய போர் தளபதிகளில் ஒருவர் ஜனாதிபதி புடினிடம் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஜெலென்ஸ்கியின் புகைப்படம் வெளியிடப்பட்டது.
காணொளி ஒன்றில் பதிவு செய்த ஜெலென்ஸ்கி, இன்றைய இலக்கு குப்யான்ஸ்க். நமது வீரர்கள் உக்ரைனுக்காக சாதனை படைத்து வருகின்றனர் என்றார். ஒவ்வொரு பிரிவுக்கும், இங்கு போராடும் அனைவருக்கும், ஆக்கிரமிப்பாளரை அழித்து வரும் அனைவருக்கும் நன்றி எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனில் நடக்கும் கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் பல மாதங்களாக சிக்கலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொது வாக்கெடுப்பு
ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக அவர்கள் முன்மொழிவுகளையும் எதிர் முன்மொழிவுகளையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு முக்கிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அமைதிக்கு ஈடாக டான்பாஸ் பகுதி முழுவதையும் உக்ரைன் ஒப்படைக்க வேண்டும் என்று ரஷ்யா நீண்ட காலமாகக் கோரி வருகிறது. அந்த முடிவு தற்போது ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் மக்களிடம் விடக்கூடும் என்றே தெரிய வருகிறது.

உக்ரேனிய நிலத்தை விட்டுக்கொடுக்க அரசியலமைப்பு அல்லது தார்மீக உரிமை தனக்கு இல்லை என்று ஜெலென்ஸ்கி நீண்ட காலமாக கூறி வருகிறார்.
உக்ரேனிய மக்களே அந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், பேச்சுவார்த்தை கடும் இழுபறியில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |