ரஷ்யாவை பயங்கரவாதத்தின் அனுசரணையாளராக முத்திரைகுத்த வேண்டும்! ஜெலென்ஸ்கி கோரிக்கை
ரஷ்யாவை பயங்கரவாதத்தின் அரச அனுசரணையாளராக முத்திரை குத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவை பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளராக அங்கீகரிக்குமாறு அமெரிக்காவைக் கோரியதுடன், ரஷ்ய சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல் 50 உக்ரைன் கைதிகள் கொல்லப்பட்டதாக கூறிய ஜெலென்ஸ்கி, இது ரஷ்யா வேண்டுமென்றே செய்த போர் குற்றம் என்று குற்றம் சாட்டினார்.
வெள்ளிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட வீடியோவில் "நான் குறிப்பாக அமெரிக்காவிடம் முறையிடுகிறேன். ஒரு முடிவு தேவை, அது இப்போதே தேவை" என்றார்.
முன்னதாக, ரஷ்யா மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் குழு, அமெரிக்கா வழங்கிய துல்லியமான ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம் ராக்கெட்டுகளை பயன்படுத்தி உக்ரைன் படைகள் தான் ரஷ்ய சிறையை தாக்கியதாக குற்றம் சாட்டினர்.
ரஷ்யாவின் முக்கிய குற்றவியல் புலனாய்வு அமைப்பிலிருந்து ஒரு குழுவை தளத்திற்கு அனுப்பி, தாக்குதல் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனிய கைதிகள் முக்கிய இராணுவத் தகவல்களை வெளிப்படுத்துவதைத் தடுக்கவே ரஷ்ய சிறைச்சாலையை உக்ரைன் தாக்க முடிவு செய்ததாகக் கூறி, டொனெட்ஸ்க் பிரிவினைவாதப் படைகளின் துணைத் தளபதி எட்வார்ட் பசுரினும் தாக்குதலுக்கு கெய்வ் மீது குற்றம் சாட்டினார்.
குற்றச்சாட்டுகளை மறுத்த ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஒருபோதும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு அல்லது போர்க் கைதிகளை குறிவைத்ததில்லை என்றார்.