ரிஷி சுனக்கிடம் இதைத் தெரிவித்தேன்! பிரித்தானியாவின் அசைக்க முடியாத நிலையைப் பாராட்டுகிறேன்..உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிடம் உக்ரைனின் பாக்முத் பாதுகாப்பு குறித்து பேசியதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி
உக்ரைன் - ரஷ்யா போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகளை பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளும் வழங்கி வருகின்றன.
உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
@AP
பிரித்தானியாவை பாராட்டிய ஜெலென்ஸ்கி
இந்த நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிடம் பேசியதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் ஒரு நல்ல உரையாடல் நிகழ்ந்தது. பாக்முத்தின் பாதுகாப்பில் முன்பக்க நிலைமை குறித்து அவரிடம் தெரிவித்தேன்.
சமீபத்திய சர்வதேச நிகழ்வுகள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டது. எப்போதும் போல உக்ரைனுக்கான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஆதரவை அதிகரிப்பதில் உறுதியான முடிவுகள் எங்களிடம் உள்ளன. பிரித்தானியாவின் அசைக்க முடியாத நிலையைப் பாராட்டுகிறேன்!' என தெரிவித்துள்ளார்.
A good conversation with 🇬🇧 PM @RishiSunak. I informed him of the situation at the front, Bakhmut's defense. Exchanged views on recent international events. As always, we have concrete results in increasing defense & economic support for 🇺🇦. Appreciate 🇬🇧's unwavering position!
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 16, 2023
@independent.co.uk

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.