ஜெலென்ஸ்கியின் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி., உக்ரைனில் வெடித்துள்ள போராட்டம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரபலமான பாதுகாப்புத் துறை அமைச்சர் மிகைலோ ஃபெடரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவு, உக்ரைன் நாடு முழுவதும் போராட்டங்களையும், அரசியல் அதிருப்தியையும் தூண்டியுள்ளது.
தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் இளைஞர்கள் தெருக்களில் திரண்டு “Hands off Fedorov”, “Stop sabotaging victory” எனும் பதாகைகளை ஏந்தி, “Shame” எனக் கோஷமிட்டனர்.
மக்கள், ரஷ்யாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த ஃபெடரோவை பதவி நீக்கம் செய்தது “பெரும் தவறு” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெலென்ஸ்கி, பாதுகாப்புத் துறை அமைச்சராக மேஜர் ஜெனரல் யெவ்ஹெனீ க்மாராவை இடைக்காலமாக நியமித்துள்ளார். அவர் தொழில்நுட்ப அடிப்படையிலான போர் நடவடிக்கைகளில் அனுபவம் பெற்றவர் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஃபெடரோவ், ஜனவரி மாதத்தில் பதவி ஏற்றார். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், தரவுகளை பயன்படுத்தி முன்னணி போரின் செயல்திறனை மேம்படுத்துதல், “Army of Drones” எனும் திட்டம், ரஷ்யாவிற்கு எதிரான சைபர் தாக்குதல்கள் போன்ற பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் அவர் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருந்தார்.
அவர் நீக்கப்பட்டதால், உக்ரைன் இராணுவத்தில் மனோபலம் குறையும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். பலர் இதை ஜெலென்ஸ்கியின் மிகப்பெரிய அரசியல் தவறாகக் கூறுகின்றனர்.
ஃபெடரோவ், “நான் தொடர்ந்து நாட்டுக்காக போராடுவேன். புதுமை, வேகம், ஒழுங்கமைப்பு மூலம் எதிரியை தோற்கடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த முடிவு, உக்ரைன் அரசியல் நிலைத்தன்மைக்கும், ரஷ்யாவிற்கும் எதிரான போராட்டத்திற்கும் புதிய சவாலாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |