உலகின் மாயைகளை அழித்து சுதந்திரத்தைப் பாதுகாக்க..உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பதிவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒவ்வொரு வீரரின் துணிச்சல் தான் உலகின் மாயைகளை அழித்து வரலாற்றை மாற்றுகிறது என கூறியுள்ளார்.
ரஷ்ய ட்ரோன்களை அழித்த உக்ரைன்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யாவின் 10க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
கீவ்வில் உள்ள இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னம் அருகே நடந்த நிகழ்வில் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'ரஷ்யா இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியை தோற்கடித்தது போல், நவீன ரஷ்யாவை நாங்கள் தோற்கடிப்போம்' என கூறினார்.
Image: AFP
ஜெலென்ஸ்கியின் பதிவு
இந்த நிலையில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், 'நமது ஒவ்வொரு வீரர்களின் துணிச்சலும், தைரியமும் உலகின் மாயைகளை அழித்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வரலாற்றை மாற்றுகிறது. போர்களில் உக்ரைனின் வெற்றியை உறுதி செய்யும் ஒவ்வொருவரும், உக்ரைனுடன் வரலாற்றின் ஒரே பக்கத்தில் இருக்க, நமது பலத்துடன் ஒன்றாக இருக்குமாறு உலகை அழைக்கின்றனர்' என தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை முயற்சிக்கு பதிலாக, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் வெடி மருந்துகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
The resilience and courage of each of our soldiers destroy the illusions of the world and change history to protect freedom. Everyone who ensures the success of Ukraine in battles calls on the world to be together with our strength, to be on the same side of history with Ukraine. pic.twitter.com/JFZNgwNVyG
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 10, 2023