உக்ரைன் அதிபர் விமானத்தை தாக்க முயன்ற ட்ரோன்: நூலிழையில் உயிர் தப்பிய ஜெலென்ஸ்கி
Zelensky’s Flight Targeted by Drone : உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கி விமானத்தை தாக்க முயற்சித்த ட்ரோன்
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவரது விமானத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்(jonas Gahr Støre) தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நார்வே மன்னர் ஹரால்டின்(Harald) இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மோல்டோவாவில் இருந்து விமானம் மூலம் ஜெலென்ஸ்கி புறப்படத் தயாரான போது இந்த தாக்குதல் சம்பவமானது நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர் ஜெலென்ஸ்கி எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு இது ஒரு சான்று என்றும் நார்வே பிரதமர் ஸ்டோர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஆதரவை கோரிய ஜெலென்ஸ்கி
நார்வே மன்னரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்திய பிறகு, சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு பதிலாக ஐரோப்பாவின் கூட்டு தயாரிப்பான FREYJA ஏவுகணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவை திரட்ட அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள் போதாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |