புதினை நேரில் சந்திக்க நான் தயார்... ஆனால் ஒருவர் கொல்லப்பட்டாலும் முடிந்தது ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!
செய்தி சுருக்கம்:
- இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் ஒற்றை உக்ரைனியர் கொல்லப்பட்டாலும் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஈடுபடாது.
- கெர்சன் நகரில் ஏதேனும் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தக்கூடாது
-
புதினுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நான் தாயார் ஜெலென்ஸ்கி அறிவிப்பு
மரியுபோல் நகரின் இரும்பு ஆலைக்குள் இருக்கும் ஒற்றை உக்ரைனியர் கொல்லப்பட்டாலும் ரஷ்யவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஈடுபடாது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலானது 60வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், முதல்முறையாக அமெரிக்க அரசு அதிகாரிகளான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அகியோர் உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதனை அமெரிக்கா உறுதிப்படுத்தாத நிலையில்,ரஷ்ய போர் ஆரம்பமான பிறகு உக்ரனுக்கு அமெரிக்க அதிகாரிகள் முதல்முறையாக மேற்கொள்ளும் சுற்றுப்பயணமாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தலைநகர் கீவ்-வில் உள்ள மெட்ரோ ரயில் நிலையதில் செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்கி, மரியுபோல் நகரின் இரும்பு ஆலைக்குள் இருக்கும் ஒற்றை உக்ரைனியர் கொல்லப்பட்டாலும் ரஷ்யவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஈடுபடாது என ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள கெர்சன் நகரில் ஏதேனும் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தினாலும் ரஷ்யவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஈடுபடாது என எச்சரித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் வயிற்றில் இருந்த குழந்தையை கொஞ்சிய கர்ப்பிணி! குழந்தை பிறந்த பின் நடந்த பயங்கரம்... புகைப்படங்கள்
இதையடுத்து,ரஷ்யவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி புடினை தான் சந்திக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஒடெசா நகரில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் முன்றுமாத குழந்தை உட்பட 8பேர் உயிரிழந்ததையும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த செய்தியாளர் சந்திப்பில் சுட்டிகாட்டினார்.
இந்த செய்திக்கான வளம்: பிபிசி