எதிரி கொடிகள் எங்கள் மண்ணில் ஆட்சி செய்யாது..எங்கள் மக்கள் அடிமைகளாக இருக்கமாட்டார்கள்..கொந்தளித்த ஜெலென்ஸ்கி
தங்கள் நாட்டின் மக்கள் ஒருபோதும் அடிமைகளாக இருக்க மாட்டார்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி
உக்ரைன், ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. அதன் சான்றாக ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை பிரித்தானியா வழங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வேறு நாட்டினர் தங்கள் நாட்டில் ஆட்சி செய்ய முடியாது என கூறியுள்ளார்.
Sergei SUPINSKY / AFP
ஜெலென்ஸ்கியின் சூளுரை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எதிரிக் கொடிகள் எங்கள் மண்ணில் ஒருபோதும் ஆட்சி செய்யாது, எங்கள் மக்கள் ஒருபோதும் அடிமைகளாக இருக்க மாட்டார்கள்.
போர்களில் உள்ள சகிப்புத்தன்மை, நமது செயல்களில் உள்ள ஆற்றல், நமது வீரர்களின் துணிச்சல் மற்றும் துல்லியம் ஆகியவை நிரந்தரமாக இருக்கும், நாங்கள் பலப்படுத்துவதுடன் தொடர்ந்து அதனை செய்வோம்' என தெரிவித்துள்ளார்.
Dirk Waem/AFP via Getty Images