ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்! ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு
ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko உடன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று நடத்திய உரையாடலைத் தொடர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், உக்ரேனிய பிரதிநிதிகள் குழு, ரஷ்ய பிரதிநிதிகள் குழுவை முன்நிபந்தனையின்றி உக்ரேனிய-பெலாரஷ்யன் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் சந்திப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
உக்ரேனிய பிரதிநிதிகள் குழுவின் பயணம், பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடு திரும்பும் போது, பெலாரஸில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடாது என்பதை உறுதி செய்யும் பொறுப்பை பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko ஏற்றுக்கொண்டார் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பெலாரஸிலிருந்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டில் ரஷ்ய பிரதிநிதிகள் குழுவை சந்திக்கப் போவதில்லை என்று ஜெலென்ஸ்கி முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், சாத்தியமான பேச்சுவார்த்தைகள் பற்றி ரஷ்யாவோ அல்லது பெலாரஸோ எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.