இந்தியாவின் மீதான அமெரிக்காவின் 50% வர்த்தக வரி சரியே..! ஜெலென்ஸ்கி கருத்து
இந்தியாவின் மீது வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கை சரியானதே என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு டீசல் ஏற்றுமதி
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை கண்டித்து அமெரிக்கா இந்தியா மீது 50% வரிவிதிப்பை அறிவித்தது.
அதே சமயம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, இந்தியா உக்ரைன் போன்ற நாடுகளுக்கு டீசல் ஏற்றுமதியை செய்து வருகிறது.
சொல்லப்போனால், உக்ரைனின் மிகப்பெரிய டீசல் விற்பனையாளராக இந்தியா மாற்றியுள்ளது.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்! சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்க வரி சரியானது
இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்டு இருப்பது சரியானது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |