பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! ரிஷி சுனக்கிற்கு நன்றி தெரிவித்தேன்..ஜெலென்ஸ்கியின் பதிவு
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் விவாதித்தது குறித்து உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் தொடரும் போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
உக்ரேனிய ராணுவ வீரர் ரஷ்ய ராணுவத்தினால் கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
APTOPIX Britain Ukraine
(Copyright 2021 The Associated Press. All rights reserved)
ரிஷி சுனக்கிடம் விவாதித்த ஜெலென்ஸ்கி
இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் ஜெலென்ஸ்கி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
'பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் எங்கள் பாதுகாப்பு தேவைகள், முன்னணியில் உள்ள நிலைமை, அதிகரித்த ஆதரவு மற்றும் திட்டமிடப்பட்ட சர்வதேச நிகழ்வுகள் குறித்து விவாதித்தோம். உக்ரைன் ராணுவ வீரரின் மனிதாபிமானமற்ற மரண தண்டனையை கண்டித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். நாம் ஒன்றாக சேர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை நிறுத்த வேண்டும் மற்றும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!' என தெரிவித்துள்ளார்.
@AP