உக்ரைனின் சுதந்திர தினத்தில் சபதமெடுத்த ஜெலென்ஸ்கி
ரஷ்யா மீதான அழுத்தம் மற்றும் இழப்புகள் அதிகரித்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கி சபதம்
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து பிரிந்த உக்ரைன், ஞாயிற்றுக்கிழமை 34வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.
அப்போது உரையாற்றிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாட்டைப் பாதுகாக்க போராடுவதாக சபதம் செய்தார்.
மேலும் அவர் தனது உரையில், "இன்று உக்ரைன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. தாக்குதல்கள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு எதிராக போராடுகிறது, தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. மேலும், மிக முக்கிமாக உக்ரைன் தனியாக இல்லை. ஒவ்வொரு நாளும், இந்தப்போரை அது எங்கிருந்து வந்ததோ, ரஷ்ய வானம் மற்றும் ரஷ்ய மண்ணுக்குத் திருப்பித் தள்ளுகிறோம்" என கூறினார்.
அத்துடன் இந்தப் போரின் ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும்போது, ரஷ்யா மீதான அழுத்தம் மற்றும் அவற்றின் உண்மையான இழப்புகள் அதிகரித்து வருகின்றன. அமைதி வந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
உக்ரைனின் சுதந்திர விழாவில் அமெரிக்க சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |