ரஷ்ய மீண்டு வர பல தலைமுறைகள் தேவைப்படும்! புடினுக்கு ஜெலன்ஸ்கி பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் மீதான படையெடுப்பினால் ஏற்படும் இழப்புகள், மீண்டு வர பல தலைமுறைகள் தேவைப்படும் அளவிற்கு இருக்கும் என ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா தாமதமின்றி மேலதிக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா தனது தவறுகளை சரி செய்வதற்கான ஒரே வழி இது தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சந்திக்க வேண்டிய நேரம், பேச வேண்டிய நேரம், உக்ரைனுக்கான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நீதியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது.
இல்லையெனில், மீண்டு வர பல தலைமுறைகள் தேவைப்படும் அளவிற்கு ரஷ்யாவின் இழப்புகள் இருக்கும் என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனும் ரஷ்யாவும் இதுவரை பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளன, பெலாரஸில் தொடங்கி, சமீபத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வருகின்றன.
எவ்வாறாயினும், போர் நிறுத்தம் அல்லது படைகளை திரும்ப பெறுவது குறித்த உடன்பாட்டை இன்னும் எட்டவில்லை.