புடின் துணிச்சல் இருந்தால் உக்ரைன் வரலாம் - ஜெலென்ஸ்கி அழைப்பு
புடின் துணிச்சல் இருந்தால் உக்ரைன் வரலாம் என ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
தற்போது ஒரு வார காலத்திற்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த புடின் ஒப்புக்கொண்டதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புடினுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு
இதனிடையே, புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ், ஜெலென்ஸ்கி விரும்பினால் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவிற்கு வரலாம், ரஷ்யா அவரது பாதுகாப்பு மற்றும் சரியான நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் என கூறினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, "மாஸ்கோவில் புடினை சந்திப்பது நிச்சயமாக எனக்கு சாத்தியமற்றது . இது கியேவில் புடினை சந்திப்பது போன்றது. நான் அவரை கியேவிற்கும் அழைக்க முடியும். துணிவிருந்தால் அவர் கியேவிற்கு வரட்டும். அவர் அவரை நான் நிச்சயமாக அழைப்பேன்.

ஏன் என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது. ஏனென்றால் ஒன்று நமக்கு எதிராகப் போரைத் தொடங்கி நடத்தி, நம்மைக் கொன்று கொண்டிருக்கும் ஒரு ஆக்கிரமிப்பாளர், மற்ற நாடு இந்த நடவடிக்கைகளில் அதன் பங்காளியாக உள்ளது.
முக்கியமான விடயம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதுதான், பேச்சுவார்த்தைக்கான இடம் அல்ல. போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் எந்தவொரு வடிவத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |