உக்ரைனில் ரசாயன குண்டு வீசி தாக்குதல்... ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனில் ரசாயன குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
Donetsk-ன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள Kramatorsk நகரில் ரஷ்யப் படைகள் வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக கிவ்வின் துணைக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஆதாரம் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சர்வதேச சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
வட கொரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம்! தென் கொரியா எச்சரிக்கை
ஆனால், அவர் தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
இதனிடையே, உக்ரைனில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.