உக்ரைனில் ரஷ்ய மொழிக்கு ஆபத்தா? ஜெலென்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு
ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா தங்களின் போர் விமானங்களை தர மிகவும் தயங்குவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார்.
சனிக்கிழமையான நேற்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட உணர்ச்சி பொங்கிய வீடியோ பதிவில், உக்ரைனை பாதுகாக்க போதுமான ஏவுகணைகள் மற்றும் பொருத்தமான ஆயுதங்கள் இல்லாமல் முடியாது, அதிலும் ரஷ்ய படைகளால் முற்றுகை இடப்பட்ட மரியுபோல் நகரை போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் இல்லாமல் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவில், மரியுபோல் நகரை பாதுகாத்து வரும் ராணுவ படை வீரர்களுடன் கலந்துரையாடியதாகவும், உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு குறைந்தபட்சம் 1 சதவிகித தைரியமாவது இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுவதை அந்த நாடு தடைசெய்வதாக ரஷ்யா முன்வைத்த குற்றசாட்டிற்கும் ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்தார்.
உங்களின் அனைத்து செயல்பாடுகளினாலும் தான் மக்கள் ரஷ்ய மொழி பேசுவதில் இருந்து வெளியேறி வருகிறார்கள், ஏன்னென்றால் தற்போது அது உங்களின் ஏவுகணை தாக்குதல், பயங்கரவாத கொலைகள், மற்றும் குற்றங்கள் என உங்களின் செயல்பாடுகளுடனும், உங்களுடனும் தான் தொடர்பில் இருக்கிறது என ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும் உக்ரைனில் அத்துமீறி நுழைந்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதலையும், வெடிகுண்டு தாக்குதலையும், பொதுமக்கள் மீது நடத்தப்படும் கொலைவெறி தாக்குதலுக்கும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மிகவும் கோபத்துடன் ரஷ்யாவிற்கு வீடியோ பதிவு வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் முக்கிய ரஷ்ய படைத்தளபதி பலி! கூட்டாளிகளே தீர்த்துக்கட்டினரா? பரபரப்பு தகவல்